இதுவரை 57 கொரோனா சடலங்கள் அடக்கம்


மட்டக்களப்பு – ஓட்டமாவடி சூடுபத்தினசேனை கொரோனா வைரஸ் அடக்கஸ்தலத்தில் இதுவரை 57 பேரின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் 5ஆம் திகதியிலிருந்து அங்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் மரணித்தவர்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

இதில் கத்தோலிக்கர்கள் இருவரின் சடலங்களும் உள்ளடங்கும் என்று ஓட்டமாவடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்பவர்களின் சடலங்கள் தகனம் செய்யப்பட்டு வந்த நிலையில், முஸ்லிம் மக்களின் கடும் எதிர்ப்புக்குப் பின்னர் அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
புதியது பழையவை