அப்பாவின் வரலாறு தெரியாதவர்
ஊருக்கு வழி காட்ட ப் போகிறார் !
அஞ்ஞானி
"செல்வநாயகத்தின் சிலை மட்டக்களப்பு மாவட்டத்தின் அவமானச் சின்னம்.அதை அகற்றும் நாள் தான் மட்டக்களப்பின் விடிவு நாள்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் சிறைச்சாலை ஊழியரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் இணைய வழி பரப்புரைக் குழுவில் இடம்பெற்றுள்ளதாக நம்பப்படும் குழந்தைவேல் நவநீதன்.அவர் போட்டிருக்கும் சீருடை மீதான விசுவாசத்தை அவதானிக்க முடிகிறது.இவரது கருத்துக்கள் பற்றி பிள்ளையானின் நிலைப்பாடு இன்னமும் தெரிய வரவில்லை. ஸ்டார்லின் ஞானம் ,கௌரி மனோகரி முதலான புனைப்பெயர்களில் எழுதி வரும் முன்னாள் புளொட் உறுப்பினர் ஒருவரின் வழி காட்டுதலிலேயே இவர் இவ்வாறு குறிப்பிட்டதாக கருத முடிகிறது.
ஆனை புகுந்த வீடும் அமினா புகுந்த வீடும் உருப்படாது என்று சொல்வார்கள்.அதே போல புளொட் சித்தாந்த வாதிகள் புகுந்த எந்த அமைப்பும் சரியான வழியில் பயணித்ததாக வரலாறு இல்லை. ஏனெனில் அடிப்படையில் விடுதலையுணர்வை ஊட்டி வளர்க்கப்படவில்லை இவர்கள். புளொட் டின் அடுத்த நிலைத் தலைவராக கருதப்பட்ட சந்ததியார், தமிழீழ கழுகுகள் படை நிறுவனர்களில் ஒருவரான ராஜ்மோகன் உட்பட ஓரத்து நாட்டில் காணாமல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்களின் விடயத்தில் மனச்சாட்சிப்படி நடந்து கொள்ளாத ஞானம் இப்போது பிள்ளையான் கட்சிக்குள் புகுந்து கொண்டு தமிழ்த் தேசியத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுகிறார். அதன் உச்சக்கட்டந்தான் தந்தை செல்வா வின் சிலை பற்றிய குழந்தைவேல் நவநீதனின் நிலைப்பாடு.
தமிழ்த் தேசியத்தை வளர்த்ததில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லையா இராஜதுரை ,காசி ஆனந்தன் முதலானோரின் பங்கு மகத்தானது. அன்னை பூபதியின் தியாகம் இன்னொரு வடிவம்.இந்த விடயங்களிலெல்லாம் இவர்களுக்கு எந்தக் காலத்திலும் புரியப்போவதில்லை.
நவநீதன் யாரென சொல்லின் செல்வர் இராஜதுரை அறிந்தால் முறக்கொட்டான்சேனையில் தமிழரசுக் கட்சியின் தூணாக ஆரம்பகாலத்தில் விளங்கியவர் உனது அப்பா எனக் சுட்டிக்காட்ட தவறமாட்டார். உனது அப்பாவைப்பற்றியே தெரியாத நீ ஊருக்கு உபதேசம் செய்கிறாயா என்று கேட்கக் கூடும். யாரால் இவரது அப்பா காணாமற் செய்யப்பட்டாரோ அந்தத் தரப்புக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற தலைகீழாக நிற்கின்றார் ஞானத்தின் வழி காட்டலில் இயங்கும் நவநீதன். இதனை இவரது தந்தையின் ஆத்மாவும் ஏற்காது.
சரியோ,பிழையோ பிள்ளையானின் செயற்பாடுகளில் உடன் பாடு இல்லாவிட்டாலும் தனது வளர்ப்பு முறையை அவர் வெளிப்படுத்தியதை ஒப்புக்கொண்டேயாகவேண்டும். விடுதலையாகி வந்தபின்னர் அவரை ஊடகமொன்று பேட்டி கண்டது. பிரபாகரனின் இழப்புப்பற்றி கேட்டபோது தான் அழுததாக அவர் குறிப்பிடுகிறார். இந்த மாதிரி விடயங்கள் ஞானம், நவநீதனுக்குப் புதிது. அவர்கள் காணாமற் செய்வது பற்றியும் குறிப்பிடுகின்றனர். (ஆற்றுக்குள் போடுவது) இது புளொட்டின் தனி வழி.
பிள்ளையான் நிதானிக்க வேண்டிய கட்டம் இது. செல்வி மனோகரின் கற்பனையான குற்றச்சாட்டுக்களை நிறுத்தியது போல தந்தை செல்வா பற்றிய கருத்துக்களை வெளியிடுவதில் கண்ணியம் இருக்க வேண்டும் என வலியுறுத்துவார் என நம்புகின்றோம்.
இன்னமும் அவரது கட்சியின் பெயரில் புலிகள் என்ற பெயர் உண்டு. குறிப்பிட்டளவு முன்னாள் போராளிகள் அவருடன் இருப்பதும் இரகசியமானதல்ல. தறிகெட்டலையும் நாம்பன்களுக்கும் புஷ்யன் களுக்கும் நாணயக்கயிறு போடுவார் என நம்புகின்றோம்.