நாடளாவிய ரீதியில் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.