தமிழர் பகுதியில் பூனைக்கறி


மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவு உற்பட்ட குருமன்வெளி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மதுவுக்கு பைட்சாக பூனையை கொன்று கறியாக்கி தின்றதோடு அதை வீடியோவெடுத்து பதிவேற்றியும் உள்ளனர்.

தாய் தந்தை, பெரியோரின் பேச்சுக்களை மதிக்காத இளம் சமூகமொன்று இங்கே வளர்ந்து விடக் கூடாது என்று பலரும் ஆதங்கப்படுகின்றனர்.

சாராயம், கஞ்சா, கசிப்பு, போதைப்பொருள் என்று பதின்ம வயதுக்குள் இவர்களைப்போன்றோர் செய்யும் அட்டூழியம் ஏராளம் பெற்றவர்கள் படும் வேதனை எண்ணிலடங்காது.

இன்று இரக்கமற்று சமூக வழமைக்கு முரணாக ஒரு வளர்ப்பு பிராணியை கொன்று உண்ணும் இவர்கள் நாளை ஒரு வேறு ஏதோ தவறை செய்ய கட்டாயம் எத்தனிப்பார்கள்? இவர்கள் யாரென்று கண்டறிந்து சிறுவர் சீர் திருத்த பிரிவில் வைத்து தீவிர புனர்வாழ்வு அளிக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்தக் கூறியுள்ளனர்.

முகநுாலில் பதியப்படும் கருத்துக்களில் 

சீனா உட்பட பல நாடுகளில் பூனை, நாயையும் உணவிற்காக வளர்கிறார்கள். விடுங்கள் சகோ ! அது அவரவர் சுதந்திரம். எமக்கு பிடிக்காவிடில் நாம் ஒதுங்குவது நல்லது.

எது சுதந்திரம்? மரபுகளை மீறுவதன் பெயர் சுதந்திரம் கிடையாது என பல்வேறு பட்ட கருத்துக்கள் முகநுாலில் பகிரப்பட்டு வருகிறது.


புதியது பழையவை