யாழ்.வலிகாமம் வடக்கில் இரு இடங்களில் பெருமளவு வெடிபொருட்கள் இன்று காலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் மீட்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் வலி வடக்கில் காங்கேசன்துறை - காற்றடைப்பு வீதி மற்றும தெல்லிப்பழை - சூலாம்பதி வீதி ஆகிய இரு இடங்களில் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தெல்லிப்பழை - சூலாம்பதி வீதியில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த மர்ம பொருள் ஒன்று வெடிபொருள் என அடையாளம் காணப்பட்டுள்ளபோதும், அதன் வகை அடையாளப்படுத்தப்படாத நிலை காணப்படுவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதிக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் காங்கேசன்துறை - காற்றடைப்பு வீதியில் காணி துப்புரவு பணியின்போது பெட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது.
இது குறித்து வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் வெடிபொருட்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் அழிப்பதற்காக கொண்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது
