மட்டக்களப்பு மாநகர தற்போதைய ஆணையாளர் சபையினை பொருட்படுத்தாது தான்தோன்றி தனமாக செயற்பட்டதன் காரணத்தினால் அவரது அதிகாரங்கள் குறைக்கப்பட்டு ஏனைய உத்தியோகத்தர்களுக்கு குறித்த அதிகாரங்களை பகிர்ந்தளித்திருந்தோம்.
இருப்பினும் அதிகார செயற்பாடுகள் அனைத்தும் தனக்குரியது என ஆணையாளர் செயற்பட முற்பட்ட வேளையில், அவருக்கு எதிராக வழக்கினை தொடுத்திருந்தேன்.
ஆணையாளரது அதிகார மீறல் சம்பந்தமாக உள்ளூராட்சி ஆணையாளர், பிரதம செயலாளர் மற்றும் கிழக்கு ஆளுநர் ஆகியோரிடம் முறையிட்டிருந்தேன். ஆளுநர் கூட இதற்கான தீர்வினை பெற்றுத்தராத நிலையில் இறுதியாக வழக்கு தொடரப்பட்டது.
வழக்கின் தீர்ப்பின் பிரகாரம் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் மாத்திரம் ஆணையாளருக்கு உரியது என இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளது.
மக்களால் மக்களின் நலனுக்காக நியமிக்கப்பட்ட எமது சபை தீர்மானங்களுக்கு அப்பால் ஆணையாளர் செயற்பட முடியாது. அது தற்போது நீதி மன்ற தீர்ப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டமை மகிழ்ச்சி.

