இராயப்பு ஆண்டகையின் உடலம் தேவாலய மையப் பகுதியில் .


மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் பூதவுடலுக்கான இறுதி அஞ்சலி எதிர் வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

இராயப்பு யோசேப்பு ஆண்டகைக்கு அஞ்சலி செலுத்த விரும்புவோர் இறுதி நேரம் வரை காத்திராது மன்னார் மறைமாவட்டத்தின் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் அல்லது மன்னார் பேராலயத்தில் பொது மக்களுக்களின் அஞ்சலிக்காக வைத்திருக்கும்போது அஞ்சலி செலுத்திக் கொள்ளும்படியும், சுகாதார நடைமுறைகளை கையாள வேண்டிய நிலை காணப்படுவதால் இறுதி நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படாது என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை மக்களிடம் அழைப்பு விடுத்துள்ளார்.

இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் உடல் மன்னார் மறைமாவட்டத்தின் பேராலயத்தின் மையப் பகுதியில் நல்லடக்கம் செய்யப்படுவதற்கான ஆயத்த வேலைகள் செய்யப்படுகின்றமை குறிப்பிடத் தக்கது.
புதியது பழையவை