சிறுவர் சபை உறுப்பினர்கள் தெரிவு.



மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின்
நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் சிறுவர்களின் பங்கேற்றலை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக கிராம மட்டங்களில் சிறுவர் சமூக வட்டங்கள் உருவாக்கப்பட்டு பிரதேச ரீதியில் பிரதேச சிறுவர் சபையும் உருவாக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றது.

அந்தவகையில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் புதிய பிரதேச சிறுவர் சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யும் நிகழ்வு செயலககேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது வாகரை பிரதேசத்தில் உள்ள 32 கிராமங்களை உள்ளடக்கியதாக பிரதேச சிறுவர் சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
புதியது பழையவை