இருவருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து


மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் மதுபோதையில் முச்சக்கரவண்டி, மற்றும் மோட்டர்சைக்கிள் செலுத்திய இருவருக்கு 70 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி நேற்று  திங்கட்கிழமை உத்தரவிட்டு இவர்களின் சாரதி அனுமதிப்பத்திரம் 6 மாதத்திற்கு இரத்து என  தீர்ப்பளித்துள்ளார்.

வெல்லாவெளி வீதி போக்குவரத்து பொலிசார் கடந்த 31ம் திகதி வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார்சைக்கிளை  மதுபோதையில் செலுத்தி வந்த இருவரையும் கைது செய்த பொலிசார் நேற்று  5 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு பொலிஸ் பிணையில் விடுவித்தனர்.

இந்த நிலையில் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி முன்னிலையில் இருவரையும் ஆஜர்படுத்தப்பட்ட போது ஒருவருக்கு தலா 35 ஆயிரம் இருவருக்கும் 70 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறும் உத்தரவிட்டு இருவருடைய சாரதி அனுமதிப்பத்திரம் 6 மாதத்திற்கு இரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார்
புதியது பழையவை