மட்டக்களப்பில் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுப்பு


நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு அமுல்ப்படுத்தப்பட்டுள்ள போதிலும் கிழக்கு மாகாணத்திலும் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

பயணத்தடை தொடரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயல்புநிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
கொரனா தொற்றின் வேகம் நாடளாவிய ரீதியில் அதிகரித்துச்செல்வதன் காரணமாக அதிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பயணத்தடை காரணமாக அனைத்து செயல்பாடுகளும் முடக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் நலன்கருதி அத்தியாவசிய தேவைகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன்பிடி தொழில் ஈடுபடுபவர்கள், நடமாடும் வியாபார நடவடிக்கை, மருந்தகங்கள், அத்தியாவசிய தேவைக்காக வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் போன்றவை அனுமதிக்கப்பட்டு பொலிஸார் மற்றும் இராணுவத்தின் கண்காணிப்பின் கீழ் பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

புதியது பழையவை