பெரியகல்லாறு மரண வீட்டு கொரோனா கொத்தணி-123ஆக உயர்வு

மட்டக்களப்பு மாவட்டம் பெரியகல்லாறில் நேற்று(24) தினம் 58 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிமனை தெரிவித்துள்ளது.

கடந்த 14 ஆம் திகதி பெரியகல்லாறு பகுதியில் இடம்பெற்ற மரண வீடொன்றில் கலந்துகொண்டவர்கள் மூலம் கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையில் நாளுக்குநாள் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இதுவரை பெரியகல்லாறு மரண வீட்டு கொரோனா கொத்தணி மூலம் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்வடைந்துள்ளதாக பிராந்திய சுகாதாரப்பணிமனை தெரிவித்துள்ளது.

களுவாஞ்சிகுடிபிராந்தியசுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் எஸ்.ராஜேந்திரன் வழிகாட்டலில் மேற்பார்வைபொதுச்சுகாதாரப்பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன் ஒழுங்கமைப்பில் பொதுச்சுகாதாரப்பரிசோதகர்கள் அடங்கியகுழுவினர் பிரதேசத்தில் கொரோனாதொற்றைக்கட்டுப்படுத்துவதற்கானசெயற்பாட்டில் தொடர்ச்சியாகஈடுபட்டுவருகின்றனர்.

பொதுமக்கள் கொரோனாகட்டுப்படுத்துவதற்க்கு இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடக்குமாறும். சுகாதாரப்பிரிவினர் முன்னெடுக்கும் செயற்பாட்டிற்கு
பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் களுவாஞ்சிகுடிபிராந்திய சுகாதாரப்பணிமனைவேண்டுகோள்விடுத்துள்ளது.
புதியது பழையவை