வவுனியாவிலும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் க.பத்மநாபாவின் 31ஆவது நினைவு தினம், இன்று 19-06-2021ஆம் திகதி (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.
வவுனியாவில் அமைந்துள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் அக்கட்சியின் முக்கியஸ்தர் கே.அருந்தவராஜா தலைமையில் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றது
இதன்போது பத்மநாபாவின் திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.