மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாற்றில் இன்று 19-06-2021ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 10 கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக பெரியகல்லாறு 02ஆம்,03ஆம் கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.பெரியகல்லாறு உதயபுரம் பகுதியில் மரண வீடு ஒன்றில் கலந்துகொண்ட 43பேருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரனின் ஆலோசனையின் கீழ் அப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அன்டிஜன் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இன்றைய தினம் பெரியகல்லாறு 03ஆம் கிராம சேவையாளர் பிரிவுகளில் 80பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர்களில் 10பேருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.