முல்லைத்தீவு கள்ளப்பாட்டுப்பகுதியில் வீடு புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்தவர்கள் மீது வாளால் வெட்டியுள்ளதுடன் வீட்டில் இருந்த வாகத்தின் மீதும் தீவைத்து தப்பிச் சென்றுள்ள்து.
இந்த சம்பவம் இரவு (27)திகதி இடம்பெற்றுள்ளது.
கள்ளப்பாட்டில் வசித்து வரும் குடும்பம் ஒன்றின் வீட்டிற்குள் புகுந்த இனம் தெரியாத நபர்கள் வீட்டில் இருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வீட்டில் நின்ற வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியுள்ளதுடன் தீவைத்துவிட்டு சென்றுள்ளார்கள்.
இதன் போது வாகனம் ஒன்று முற்றாக எரிந்துள்ளதுடன் ஒரு வாகனம் சேதமடைந்துள்ளது. இதன்போது ஒருவர் வாள்வெட்டிற்கு இலக்கான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.