லண்டன் வோள்தஸ்ரோ கற்பக விநாயகர் ஆலய நிருவாகத்தின் அனுசரணையில் - போரதீவுப்பற்றில் நிவாரண உதவிகள்


மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தில் நாட்டில் ஏற்பட்ட கொவிட் அனத்தத்தினால் அன்றாட தொழிகளை இழந்து மிகவும் கஷ்டத்தில் வாழும் குடும்பங்களுக்கு இன்று 27-06-2021ஆம் திகதி உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.

லண்டன் வோள்தஸ்ரோ கற்பக விநாயகர் ஆலய நிருவாகத்தின் அனுசரணையில் அகிலன் பவுன்டேசனால் இந்த நிவாரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

அகிலன் பவுன்டேசன் இலங்கைக்கான இனைப்பாளரும் முன்னாள் போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளருமான V.R.மகேந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தழிழரசிக்கட்சியின் ஊடக செயலாளருமான பா.அரியநேத்திரன் மற்றும் போரதீவுப்பற்று இளைஞர் சேவை உத்தியோகஸ்தர் யு.சுந்தரலிங்கம் .பட்டிப்பளை போரதீவுப்பற்று.வவுனதீவு பிரதேச மகளிர் ஒருங்கினைப்பு தலைவர் S.கலாவதி(நவனி) ஆகியோர்கள் கலந்து நிவாரணம் வழங்கிவைத்தனர்.

இந் நிவாரண பணியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட குடும்பத்துக்கும் ,கொவிட் அனத்தத்தினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்துக்கும் 2000ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் 100 குடும்பத்துக்கு வழங்கப்பட்டன.
புதியது பழையவை