திருகோணமலையில்-சீமெந்து லொறியொன்று விபத்து


திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து ஏற்றிச்சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளானதில் லொறியின் சாரதி படுகாயங்களுக்குள்ளான நிலையில், கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தளாய் 92ஆம் கட்டைப் சந்தியில் இன்று 28-06-2021ஆம் திகதி அதிகாலை 05 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் 52 வயதுடைய ஒருவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையிலிருந்து குருநாகலுக்குச் சென்ற லொறியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கமே, இந்த விபத்துக்கு பிரதான காரணமென ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து அறியமுடிகின்றதென, பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை