விபச்சார விடுதி சுற்றிவளைப்பு- ஆடைத்தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் கைது


ராஜகிரிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஊழல் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக செயற்பட்டு வந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது நான்கு பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
நாவல, கூரே மாவத்தை மற்றும் எதுல் கோட்டே ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போதே இந்த கைது சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

வனாதவில்லுவ,அங்குனாகொலபெலெஸ்ஸ,எம்பிலிப்பிட்டிய,களனி ஆகிய பகுதிளைச் சேர்ந்த 21 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கொழும்பிலுள்ள ஆடை தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் என காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
புதியது பழையவை