சேதன பசளைகளை பயன்படுத்தும் திட்டம் மனிதாபிமான தீர்மானமாகும்


விவசாயத்துறையில் முற்றிலும்  சேதன பசளைகளை பயன்படுத்தும்  திட்டமானது நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட, மனிதாபிமான தீர்மானமாகுமென கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஏனையவர்களின் கருத்துப்படி இந்த திட்டம் அரசியல் நிகழ்ச்சி நிரல்படுத்தப்பட்டது அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் கடந்த சில போகங்களின் போது சேதன பசளைகளை  மாத்திரம் பயன்படுத்தி நெல் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டமையானது நாட்டை விஷத்தன்மை இல்லாத தீவாக மாற்றுவதற்கான முதல் படியாகுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இரசாயன உர பயன்பாட்டினை இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானமானது மதிப்பு மிக்கது எனவும், இது நம் வாழ்வில் அடைந்த வெற்றியாகுமெனவும் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யகம்பத் மேலும்  தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை