தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான M A சுமந்திரன் தெரிவித்தார்.
இன்று 13-06-2021ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசாங்கம் சரியான முறையில் ஆட்சி செய்யவில்லை அடக்குமுறைகளை பாவித்து மக்களை நசுக்கும் வேலைத்திட்டத்தினை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது
எனவே இந்த அரசாங்கம் எதிர்காலத்திலாவது சரியான முறையில் செயற்படாவிட்டால் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் செயற்பாட்டில் நாங்கள் ஏனைய எதிர் கட்சிகளுடன் இணைந்து அதற்குரிய இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம் எனவே இந்த அரசாங்கமானது கடும் போக்கை கைவிட்டு அடக்குமுறையை விட்டு குடும்ப ஆட்சி முறையினையும் கைவிட்டு செயற்பட வேண்டும். குடும்ப ஆட்சி தொடரக்கூடாது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் உடைய பங்களிப்போடு அது எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவர்களுடன் சேர்ந்து ஆட்சி நடாத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் .
தற்போதைய இடர் காலத்தில் இடர் காலத்தினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இந்த அரசாங்கம் செய்கின்ற கோரமான ஆட்சி முறையினை உடனடியாக நிறுத்த வேண்டும்என்றார்.
அத்தோடு தற்போது இலங்கையில் கொரோனா நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் சரியாக செய்யப்படவில்லை குறிப்பாக தடுப்பூசி வழங்கல் மற்றும் ஏனைய செயற்பாடுகளில் பல முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன. எனவே சுகாதார அமைச்சு மற்றும் அதனோடு சம்பந்தப்பட்டவர்கள் சரியாக செயற்படாது விட்டால் மக்களை காப்பாற்றுவதற்காக தங்கள் பதவிகளை துறவுங்கள் தற்போதைய நிலையில் கொரோனா நிலை தொடர்பில் சுகாதார அமைச்சு தான் பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்தார்
