போரதீவுப்பற்றில் இரண்டாவது தினமாகவும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள்




மட்டக்களப்பு மாவட்டத்தின் 14பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சைனாபாம் தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டாவது தினமாகவும் இன்று12-06-2021ஆம் திகதி  தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் நடைபெற்றன.
வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் போரதீவுப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் விவேகானந்தராஜா தலைமையில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.

வீதிஅபிவிருத்தி தினைக்களம், ஆடைத்தொழிச்சாலை, கமநலகேந்திரநிலையம், நீர்பாசன தினைக்களம் ஏனைய அரச தினைக்களங்கள் உட்பட பலருக்கு இன்று தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
இன்றைய தினம் இராணுத்தினர் தடுப்பூசி ஏற்றுவதற்கு வருகைதந்தோருக்கான உதவிகளை வழங்கினர்.



புதியது பழையவை