இலங்கை அரசாங்கம் பொது மக்களுக்கு வழங்கியுள்ள நிவாரணமானது போதுமானதாக இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – கந்தர்மடம் – அரசடிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
