மட்டக்களப்பில் அதிகரிக்கும் கொரோனா நோயாளர்கள்


மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று 17-06-2021ஆம் திகதி மட்டும் கோவிட் தொற்றினால் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன்,176 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை,மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேருக்கும்,காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 36 பேருக்கும், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 26 பேருக்கும், ஓட்டுமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 23 பேருக்கும், கோறளைப்பற்று மத்தியில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேருக்கும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 48 பேருக்கும், பட்டிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேருக்கும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கும் , வெல்லாவெளி, வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவர் வீதம் 2 பேருக்கும், பொலிஸார் 2 பேருக்கும், சிறைச்சாலை கைதிகள் 2 பேர் உட்பட 176 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, மாவட்டத்தில் கோவிட் தொற்று கடந்த இரு தினங்களாக அதிகரித்து செல்கின்றதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.ஆகவே பொதுமக்கள் மிகவும் அவதானமாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை