மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் குதிப்பு

மரணதண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் உள்ள 76 கைதிகள், இன்று (24) பகல் முதல் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

மரணதண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து ஆயுள்தண்டனையாக மாற்றப்பட வேண்டும் என்று கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்று ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சட்டத்துக்கு அமைவாக மரணதண்டனை விதிக்கப்பட்டு சில வருடங்கள் கடந்த பின்னரே அது ஆயுள்தண்டனையாக மாற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்
புதியது பழையவை