நாளையதினம் நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பை வெளியிடுகிறார் கோட்டாபய


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (25)விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவிருப்பதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிஅளவில் இந்த விசேட அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட தயாராகி வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விசேட அறிவிப்பு நாளையதினம் நாட்டிலுள்ள அனைத்து வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை