எரிபொருள் விலையேற்றம் மரத்தால் விழுந்தவனை மாடேறி மிரித்தசெயலாய் மக்கள் நிலை!


கொரோணா நோயால் பீதியில் உண்ண உணவின்றி தத்தளிக்கும் இவ்வேளையில் திடீரென எரிபொருட்களின் விலைகளை அமைச்சர் உயர்த்தியது மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த செயலைப்போன்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், பட்டிருப்புதொகுதி் இலங்கை தமிழரசுகடசி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

எரிபொருள் விலையேற்றல் தொடர்பாக மேலும் கருத்து கூறுகையில்.

தற்போதுள்ள நிலையானது இலங்கை முழுவதும் கொரோணா பரவல் ஏற்பட்டு பயணத்தடையால் வெளியில் எந்த தொழிலுக்கும் செல்லமுடியாமல் மக்கள் வீட்டில் முடக்கப்பட்டுள்ளனர்.

அன்றாடம் கூலித்தொழில் செய்யும் தொழிலாளர்கள் உழைப்பின்றி ஒருவேளை உணவுகூட இல்லாமல் கஷ்டப்படுகின்ளனர்.

இவ்வாறான இக்கட்டான நாடு திண்டாடும் காலத்தில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பால் அனைத்து பொருட்களின் விலையும் ஐந்து தொடக்கம் பத்து வீதமாக விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சாதாரணமக்கள் முச்சக்கரவண்டியில் பிரயாணம் செய்யக்கூட முடியாமல் உள்ளனர் ஊர் உலகம் எல்லாம் கொரோணா நோயால் திண்டாடும் இவ்வேளையில் மக்களின் கவனத்தை எல்லாம் கொரோணாநோய் பயணத்தடை மீது செலுத்திவிட்டு்யாருக்கும் தெரியாமல் எரிபொருள்விலைகளை அதிகரித்தமை்இந்த அரசாங்கத்தின் கபடத்தனமான செயலாகும்.

உடனடியாக மக்கள்மீது அரசாங்கத்திற்கு அக கறை இருப்பின் ஒரு அவசர காலநிலையில் எந்த ஒரு பொருட்களுக்கும் விலைகளை கூட்டாமல் விலைகளை குறைப்பதுதான் நல்நோக்கம் கொண்ட அரசின் கடமை ஆனால் இது மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிக்கும் செயல் எனவும் மேலும் கூறினார்.
புதியது பழையவை