மட்டு-ஆயித்தியமலையில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்து


மட்டக்களப்பு ஆயித்தியமலையில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுணதீவு - ஆயித்தியமலை பிரதான வீதியில் முள்ளாமுளை பகுதியில் வீதியோரமாக கொங்கிரிட் கல்லில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஆயித்தியமலை தெற்கு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயதுடைய தியாகராசா சுரேஸ்கரன் என்பவரே உயிரிழந்துள்ளார். 

விபத்துக்குள்ளான நபரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்கையில் மரணமானார் எனவும் தெரியவருகின்றது. குறித்த நபர் தொழில் நிமிர்த்தம் கொழும்பிலிருந்து நேற்றய தினம் வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் தனது விட்டிலிருந்து இன்று (24)காலை வவுணதீவு சுகாதார அலுவலகத்திற்கு சுகயீனம் காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் செல்கையில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
மேலும் உயிரிழந்தவரின் சடலம் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை