ஊடகவியலாளர்களை கண்டு தலைதெறிக்க தப்பியோடிய வியாழேந்திரன்!


இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்க முற்பட்ட போது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
அந்த சம்பவம் தொடர்பில் முன்னுக்குப்பின் முரணான பல கருத்துக்களை தெரிவித்திருந்தார் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன். இந்நிலையில், உண்மையில் நடந்த சம்பவம் என்ன என்று அவரிடம் கேள்வியெழுப்புவதற்காக ஊடகவியலாளர்கள் அவரை வழிமறிக்க முற்பட்டபோது அங்கிருந்து தலைதெறிக்க தப்பி ஓடியுள்ளார் எனவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் வாகனத்தை மறித்தும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தனது வாகனத்தில் தப்பிச் சென்றமை அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. கொலைச் சம்பவம் தொடர்பாக வியாழேந்திரனுக்கும் தொடர்புகள் ஏதும் இருக்குமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் வியாழேந்திரன் வாகனத்தில் தப்பிச் சென்றது ஏன் எனவும்  கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.  கடந்த சில தினங்களாக அரசியல் பிரமுகர்களும் வியாழேந்திரன் தொடர்பாக பல விமர்சனங்களை முன்வைத்திருந்த போதும், வியாழேந்திரன் கொலை சம்பந்தமாக ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவிக்காமல் வாகனத்தில் தப்பிச் சென்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது
புதியது பழையவை