60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி


மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபை பிரிவுகளில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் ஆடைத் தொழிற்சாலை பிரதான வீதியில் அமைந்துள்ள பொது மண்டபத்தில் குறித்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கிராம அலுவலகர் பிரிவுகள் ஊடாக ஒதுக்கப்பட்ட நேரங்களுக்கு அமைய செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

உரிய திணைக்கள அதிகாரிகள் தடுப்பூசி செலுத்தும் இடத்திற்கு சென்று கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

புதியது பழையவை