மன்னார் மடு திருத்தலத்திற்கு பாதயாத்திரை!

மன்னார் மடு திருத்தலத்திற்கான பாதயாத்திரையை மேற்கொள்வோர் இன்று(28) முல்லைத்தீவு மல்லாவியை அடைந்தனர்.

வடமராட்சி கிழக்கு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இருந்து நேற்று அதிகாலை 3:00 மணிக்கு ஒரு தொகுதி யாத்திரிகர்கள் மடுவிற்கு புறப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஏ9 வீதி வழியாக முறிகண்டியில் இருந்து கொக்காவில் வீதி வழியாக ஐயன்கன் குளம் வரை சென்று அங்கு இரவு தங்கியிருந்தனர்.
இன்று காலை இவர்கள் ஐயன்கன்குளத்தில் இருந்து மல்லாவி வழியாக நட்டாங்கண்டலைச் சென்றடைந்து, நாளை புனித மடு திருத்தலத்தை சென்றடையவுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலில் இருந்து நாடு விடுபடவும் நாட்டு மக்கள் அனைவரும் சுபீட்சமாக வாழவும் குறித்த பாத யாத்திரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதியது பழையவை