இலங்கையில் ஆசிரியர் மாணவர் பெற்றோர்களை துன்புறுத்துகிற கல்வி நெருக்கடிக்கு உடனடி தீர்வினை வழங்கக்கோரி ஆசிரியர் சேவைச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தின் போது,
24 வருட ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாட்டுக்கு உடனடியாக தீர்வு வழங்கு, இலவச கல்வியை ராணுவ மயமாக்கும் கொத்தலாவல சட்டமூலத்தை உடனடியாக நீக்கு, ஆசிரியர் மாணவர் பெற்றோர்களை துன்புறுத்துகிற கல்வி நெருக்கடிக்கு உடனடி தீர்வினை வழங்கு ஆகிய மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.



