கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் ஆலையடிவேம்பிற்கு விஜியம்


ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் நேற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கும் விஜயம் செய்துள்ளார்.

இதன்போது ஆளுநருக்கு பிரதேச செயலாளர் தலைமையிலான அரச அதிகாரிகள் சம்பிரதாயபூர்வமாக வரவேற்பளித்தனர்.

பிரதேச செயலக மண்டபத்தில் இடமபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற ஆளுநருக்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவுகளின் நிலை தொடர்பிலும் தேவையான பிரதேச அபிவிருத்தி தொடர்பிலும் பிரதேச செயலாளர் விளக்கமளித்தார்.

குறிப்பாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் நீண்டகாலமாக தீர்வு காணப்படாமலிருக்கும் சின்னமுகத்துவாரத்தின் நிரந்த அணைக்கட்டு தேவைப்பாடு தொடர்பிலும் அதனை அமைப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் எடுத்துரைத்தார்.

நிரந்தர அணைக்கட்டு இன்மையால் வருடந்தோறும் விவசாயிகளும் மீனவர்களும் பொதுமக்களும் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாகவும் விரிவான விளக்கமளித்தார்.

களப்பில் உள்ள வளங்களை பயன்படுத்தி சேதனப்பசளை உற்பத்தியை மேற்கொண்டு மக்களது வாழ்வாதாரத்தினை உயர்த்தும் திட்டங்களையும் முன்மொழிந்தார்.

குறித்த தேவைப்பாடுகள் மற்றும் கருத்துக்களை கேட்டறிந்து கொண்ட ஆளுநர் இதற்கான தீர்வுகளை பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.
புதியது பழையவை