கிளிநொச்சியில் விபத்து


கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து புனித திரேசா ஆலயம் முன்பாக ஏ 9 வீதியில் இன்று (03) மாலை 5 மணியளவில் ஏ 9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து சம்பவத்தில் கிளிநொச்சி நகர்ப் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய கிரிதரன் சந்திரசேனன் என்பவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி நகர் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் கப்ரக வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நடுப்பகுதியில் உள்ள கல்லில் மோதி விபத்துக்குள்ளானது.

இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சியில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை