மிருக வேட்டைக்காக வைக்கப்பட்டிருந்த கட்டுத்துவக்கு வெடித்து குடும்பஸ்தர் படுகாயம்

தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் மிருக வேட்டைக்காக வைக்கப்பட்டிருந்த கட்டுத்துவக்கு தவறுதலாக வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான வேலாயுதபிள்ளை கிருஷ்ணகுமார் வயது 35 என்பவரே இச்சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்தவர் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
புதியது பழையவை