பாடசாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை

தடுப்பூசி செலுத்திய பின்னர் எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ஜி.எல். பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பிராந்தியத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் இன்றும் நாளையும் தடுப்பூசி போடப்படும் என்றும் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இதன்போது சுட்டிக்காட்டினார்.
புதியது பழையவை