மின் உற்பத்தி நிலையம் திறப்பு

மன்னார் பிரதேச செயலக பிரிவில் உள்ள, நடுக்குடா பகுதியில் அமைக்கப்பட்ட நடுக்குடா காற்றாலை மின் உற்பத்தி நிலையம், திறந்து வைக்கப்பட்டது.

நேற்று மாலை 4.30 மணியளவில், மின் சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, வைபவ ரீதியாக திறந்து வைத்து, பணிகளை பார்வையிட்டார்.

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா பகுதியில் அமைக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையம், இவ்வாறு திறந்து வைக்கப்பட்டது.

இதன் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், கே.திலிபன், அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்கள், அமைச்சின் செயலாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

புதியது பழையவை