கொழும்பு 10, மருதானை பொலிஸ் நிலையத்தில் இன்று(16) பாரிய தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தீப்பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன என்று கொழும்பு தீயணைப்புச் சேவை திணைக்களம் தெரிவித்தது.
மருதானை பொலிஸ் நிலையத்தின் மேல் மாடியிலேயே தீ விபத்து ஏற்பட்டது. எனினும், தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என மருதானைப் பொலிஸார் தெரிவித்தனர்.

