மட்டக்களப்பில் பிரதேச கற்றல் மைய நிலையங்களை ஆரம்பிக்கும் நிகழ்வு


மட்டக்களப்பு மாவட்டத்தில் நிகழ்நிலை மற்றும் தொலைக்கல்வி நடவடிக்கைகளுக்கான வசதிவாய்ப்புகள் இல்லாத மாணவர்களுக்கு பிரதேச கற்றல் மைய நிலையங்களை ஆரம்பிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் ஒரே நேரத்தில் 28 பாடசாலைகளில் கற்றல் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் நடைபெற்ற சம்பிரதாயபூர்வ நிகழ்வில் வலயக்கல்விப்பணிப்பாளர் டாக்டர் உமர்மௌலானா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

பாடசாலை அதிபர் எம்எம். மௌஜுத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வலயத்தின் நிருவாகத்திற்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம்.ஜே.எப்.றிப்கா, கல்வி அபிவிருத்திப்பிரிவின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம்.எச.எம். றமீஸ் மற்றும் சமாதானக்கல்வி இணைப்பாளர் எம்.ஜி.ஏ நாஸர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை டாக்டர் பதியுதீன் மஹ்மூத் ஆரம்பநெறி பாடசாலையில் அதிபர் எம்எம். ஜலால்தீன் தலைமையில் நடைபெற்ற கற்றல் நிலைய ஆரம்ப நிகழ்வில் அப்பாடசாலையின் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.ஜி.ஏ நாஸர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

கல்வியமைச்சின்அறிவுறுத்தலுக்குஅமைவாக நாடளாவிய ரீதியில் சுமார் இரண்டாயிரம் பாடசாலைகளில் கற்றல் மைய நிலையங்கள் ஆரம்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை