பட்டமொன்றின் நூலில் சிக்குண்டு மோட்டார் சைக்கிளொன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த தாயும் மகனும் பலியாகியுள்ளதுடன் தந்தையும் அவரது மற்றுமொரு மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலி- கொழும்பு பிரதான வீதி, பூசா, பிட்டவலை இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள பிரதான வீதியில், நேற்று (17) இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில், கிங்தொட்ட பியதிகம பிரதேசத்தைச் சேர்ந்த சுதசிங்க லியனகே மேனகா பிசாதினி (வயது 34), அனுக ரன்துல (ஒன்றரை வயது) என்ற குழந்தையுமே பலியாகியுள்ளனர்.
வீதியில் பட்டமொன்று விழுந்துக் கிடந்துள்ள நிலையில் அதனது நூல் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்துள்ளதுடன் என்றும் இதன் காரணமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், கையினால் நூலைப் பிடித்து இழுத்து அறுக்க முற்பட்டபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்னர்.
விபத்தில் காயமடைந்த நால்வரும் உடனடியாக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் அவர்களில் தாய் மற்றும் மகனின் உயிரை காப்பாற்ற முடியாது போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை இன்று(18) இடம்பெறவுள்ளது.
இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
