வவுனியாவில் தொடர்ச்சியாக தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுப்பு!

வவுனியா மாவட்டத்தில் கடந்த 28ம் திகதி தொடக்கம் கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், ஆசிரியர்கள், 30 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருவதோடு, இச்செயற்பாட்டினை சுகாதார பகுதியினர், கிராம சேவகர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இன்றையதினம் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்திலும் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஈச்சங்குளம், புதுக்குளம், கல்மடு கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த மக்கள் ஆர்வத்துடனும், சுகாதார நடைமுறைகளை பேணி தடுப்பூசியினை பெற்றுச்செல்வதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

இதுவரை வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 35 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வைத்தியசாலை, வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், நவ்வி, நெடுங்கேணி வைத்தியசாலை போன்ற இடங்களில் தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை