வடமராட்சி கிழக்கு குடத்தனை கிழக்கு பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் கதிரிப்பாய் அச்சுவேலியை சேர்ந்த 31 வயதுடைய அ.கபாஸ்கர் என இனங்காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் நேற்றிரவு பத்து மணியளவில் வேலைமுடித்து வீட்டிற்கு வந்த நிலையில் உணவருந்தியபின் உறங்கச் சென்ற நிலையில் இன்று (18) காலை மாமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி கதிரிப்பாயிலிருந்து வந்து தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரனைகளை பருத்தித்துறை பொலீஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

