கொழும்பு நகரம் நாட்டின் பிரஜைகளுக்கு இல்லாமல் போகும் நிலை- தலதா அத்துக்கோரள

கொழும்பு நகரம் நாட்டின் பிரஜைகளுக்கு இல்லாமல்போகும் நிலைமை உருவாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று(18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்க தரப்பினர் விற்ற அனைத்தையும் மீட்போம் என கூறிக்கொண்டே தற்போதைய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்க தரப்பினர் ஆட்சிக்குவந்தனர்.
இது நாட்டுமக்களுக்கு அவர்கள் அளித்தவாக்குறுதியாகும்.
கொழும்புத் துறைமுக நகரம் விற்கப்பட்டுள்ளது.
அதுதொடர்பில் பேசிபயனில்லை.
இந்நிலையில் ஏனைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் அரசாங்கம் வெளிநாடுகளுக்கு விற்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றது.

இதற்காகவா இந்த அரசாங்கம் ஆட்சிக்குவந்தது.
நிதியமைச்சின் ஊடாக நிறுவனமொன்றை அமைத்து கொழும்பில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை விற்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபடுகின்றது.

கொழும்புநகர் நாட்டுமக்களுக்கு இல்லாமல் போகும் நிலைமை உருவாகியுள்ளது.
நாம் முன்னராகவே கூறியதைப்போன்று இராணுவ முறைமை மற்றும் ஏகாதிபத்திய வாதம் என்பன தலைதூக்க ஆரம்பித்துள்ளது.

அதுவும் தனிநபருடைய விருப்புக்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்றது.
ஒருவர் நாட்டின் சொத்துக்களை விற்பது தொடர்பில் பேசும்போது மற்றையவர் அதனை பாதுகாப்பது தொடர்பில் பேசுகின்றார். இவ்வாறாக குறித்த விவகாரம் தற்போதைய அரசாங்கதரப்பினரின் குடும்பப்பிரச்சினையாக மாறியுள்ளது.
புதியது பழையவை