ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை 6 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக, எதிர்கட்சிகள் முன்வைத்துள்ள அவநம்பிக்கை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவநம்பிக்கை பிரேரணை மீதான விவாதத்தின்போது அமைச்சருக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை தெளிவுப்படுத்துவதே இந்த சந்திப்பின் பிரதான நோக்கமாகவுள்ளதாக ஆளும் கட்சியின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, புதிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவால் அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
