துப்பாக்கிச் சூட்டில் ‘லலித் வசந்த’ பலி!

திட்டமிடப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய ‘லலித் வசந்த’ பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியாகியுள்ளார்.

இதனைப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சீதுவைப் பகுதியில் கட்டளையை மீறி பயணித்த அதிசொகுசு வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் வாகனத்தில் பயணித்த நபர் பலியாகியுள்ளார்.

இதனையடுத்து, சுமார் 6 கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ‘லலித் வசந்த’ என்பவரே உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
புதியது பழையவை