சுகாதார வழிமுறைகள் அடங்கிய புதிய சுற்றறிக்கை – முழு விபரம் உள்ளளே..!



நாடளாவிய ரீதியில் நாளை வரை நீடிக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணரத்ன தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதம் 19 ஆம் திகதி வரை பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பான புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பொது போக்குவரத்து சேவை 50 வீதமானவர்களுக்கு மாத்திரமே பயணம் செய்ய முடியும் எனவும்
தனியார் அல்லது வாடகை வாகனங்களில் ஆசன எண்ணிக்கைக்கு மாத்திரமே பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. .

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தேவையான உத்தியோகத்தர்களை மாத்திரம் கடமையில் ஈடுபடுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டங்கள் 10 பேரை மட்டுப்படுத்திய நிலையிலேயே இடம்பெறவேண்டும்.
பயிற்சி பட்டறை, கூட்டங்கள் ஆகியனவற்றிற்கு தேவையேற்படின் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் 25 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், திருமண பதிவுகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
10 மணமக்கள் உள்ளிட்ட 10 பேருடன் திருமண பதிவுகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மத வழிபாட்டு தலங்களுக்குள் பிரவேசிப்பதற்கு தொடர்ந்தும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் மற்றும் அடகு விற்பனை நிலையங்கள் நாளை திறக்கப்படும் என்பதோடு, 10 வாடிக்கையாளர்களுக்கு ஒரே நேரத்தில் சேவைவழங்கஅனுமதிக்கப்பட்டுள்ளது.
சிகையலங்கார நிலையங்களில் ஒரே நேரத்தில் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது
சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பேக்கரிகள் போன்றவற்றில்  3 வாடிக்கையாளர்களுக்கு மாத்திரம் ஒரே நேரத்தில் சேவை வழங்கப்பட வேண்டும்
ஒருவர் உயிரிழந்தால் சடலத்தை பொறுப்பேற்று 24 மணித்தியாலங்களில் இறுதி சடங்குகளை முன்னெடுக்க வேண்டும். 15 பேருக்கு மாத்திரமே கலந்து கொள்ள முடியும்
.
திரையரங்குகள், பூங்காக்கள், கடற்கரை, நீச்சல் தடாகங்கள், Pub, Bars, கெசினோ, களியாட்ட விடுதிகள், தொடர்ந்தும் மூடப்படுவதுடன் Spa திறக்கப்படும்.
ஹோட்டல்கள், ர்ஸ்ட்டராண்ட்கள் திறந்து காணப்படுவதுடன், குறித்த இடங்களில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி அங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள பட வேண்டும்.

ஆகிய விதிமுறைகள் உள்ளிட்ட 47 விதிமுறைகள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
புதியது பழையவை