வற்றாப்பளை கண்ணகி அம்மனை தரிசித்த சுகாதார அமைச்சர்


சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்சி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு இன்று வருகைதந்தார்.

அண்மையில் அமைச்சர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஆலயத்தில் நேர்த்திக் கடனை தீர்க்கும் முகமாக அமைச்சர் இன்று ஆலய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வருகை தந்ததாக அறிய முடிகின்றது.

இந்தநிலையில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு பொலிசாரினால் அனுமதி மறுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அவர் தனிப்பட்ட நிகழ்வாக வழிபாடுகளில் கலந்து கொள்ள வந்த நிலையில், அதனை ஒளிப்பதிவு புகைப்படங்கள் எடுக்க ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
புதியது பழையவை