சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனம் - வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் சமுர்த்தி வதிவிட பொருளாதார நுண்நிதி சுய தொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.

நாடாளவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் சௌபாக்கிய உற்பத்தி கிராமம் நிகழ்ச்சி திட்டத்தின் மூலம் ஒருங்கிணைந்த கைத்தறி மற்றும் ஆடை தயாரிப்பு தொழில் திட்டத்தின் கீழ் கைத்தறி மற்றும் தையல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் வன வள அபிவிருத்தி ,ராஜாங்க அமைச்சர் கௌரவ விமலவீர திசாநாயக்கவின் இணைப்பாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சம்மாந்துறை இணைப்பாளருமான யு.சு.ஆ.றபீகின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் தலைமையில் நேற்று இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்வில் பிரதம அதிதியாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் வன வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ திலக் ராஜபக்ச கொண்டதுடன் நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் யு.லதிப், சம்மாந்துறை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பயனாளிகலும் கலந்து கொண்டிருந்தனர்.

புதியது பழையவை