மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர்கள்சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் இராஜாங்க அமைச்சர் டீ.வீ.சனகா ஆகிய இருவரும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.

இன்று 01-07-2021ஆம் திகதி காலை மேற்கொள்ளப்பட்ட குறித்த விஜயத்தின் போது மட்டக்களப்பு விமான நிலையத்தினையும் பார்வையிட்டுள்ளனர்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களையும் பார்வையிட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட மாவட்ட அரசியல் பிரதிநிதிகளும், அரச அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
புதியது பழையவை