முல்லைத்தீவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த யானை

முல்லைத்தீவில் உடல் நிலை பாதிக்கப்பட்டநிலையில் சிகிச்சையளிக்கப்பட்டுவந்த யானை உயிரிழந்துள்ளது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒதியமலை பெரியகுளம் கிராமத்தில் காட்டுயானை ஒன்று உயிருக்காக போராடியது.

அதனை அவதானித்த பொதுமக்கள், முல்லைத்தீவு மாவட்ட வனஜீவரசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு தகவல் வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் வனஜீவராசிகள் திணைக்கள வைத்தியரும், வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோத்தர்களும் நோய்வாய்ப்பட்ட யானைக்கு சிகிச்சை வழங்கியிருந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த யானை உயிரிழந்துள்ளது.

யானை நோய்வாய்ப்பட்டமை தொடர்பாக மேலதிக பரிசோதனைகளை வனஜீவராசிகள் திணைக்களம் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை