மட்டக்களப்பு மாவட்டம் பலாச்சோலையில் வீடு ஒன்றில் விசேட பூஜை வழிபாட்டில் கலந்துகொண்ட 18 பேர் தனிமைபடுத்தப்பட்டதுடன் வீட்டின் உரிமையாளர் குருக்கள் ஆகிய ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு ஏறாவூர் காவற்துறை பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச்சோலையில் வீடு ஒன்றி இன்று வெள்ளிக்கிழமை (13) சுகாதார துறையினரின் அனுமதியின்றி பெருமளவான மக்கள் பங்கேற்புடன் வைரவருக்கான விசேடபூஜை வழிபாடு இடம்பெற்ற வீட்டை பொதுசுகாதார பரிசோதகர்கள் காவற்துறையினர் முற்றுகையிட்ட நிலையில் பலர் தப்பியோடிய நிலையில் 18 பேரை தனிமைப்படுத்தி உள்ளதுடன் வீட்டின் உரிமையாளர். குருக்கள் ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
பிரதேச பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைக்க பெற்ற தகவலையடுத்து வந்தாறுமூலை பலாச்சோலை பகுதியில் சம்பவ தினமான இன்று வீடு ஒன்றில் சுகாதார துறையினரிடம் எந்தவிதமான அனுமதியையும் பெறாமல் வைரவருக்கான விசேட பூஜை வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டு அந்த பூஜை வழிபாட்டில் 65 பேருக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுட்டிருந்தனர்.
இந்த நிலையில் காவற்துறையினரின் உதவியுடன் பொது சுகாதார பரிசோதகர்கள் அந்த வழிபாட்டு இடத்தை முற்றுகையிட்டதையடுத்து அங்கிருந்து பலர் தப்பி ஓடிய நிலையில்18 பேரை காவற்துறையினர் தடுத்துவைத்து அவர்களின் தரவுகள் பதியப்பட்டு அவர்களை பொது சுகாதார பரிசோதகர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தியதுடன் பூஜை வழிபாட்டை ஏற்பாடு செய்த வீட்டின் உரிமையாளர் குருக்கள் ஆகிய இருவருக்கும் எதிராக வழக்கு தாக்குதல் செய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.