மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் உட்பட மாநகரசபையில் கொரோனா

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர்,பிரதி ஆணையாளர் உட்பட மட்டக்களப்பு மாநகரசபையில் 13பேர் கொரனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கொரனா தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்பட்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு மாநகரசபையில் கடந்த மூன்று தினங்களாக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவரும் நிலையில் மாநகரசபை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

நேற்று(13) திகதி மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் உட்பட மாநகரசபையில் கடமையாற்றும் ஐந்து பேர் நேற்றைய தினம் கொரனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன் கடந்த மூன்று தினங்களுக்குள் மாநகரசபையின் பிரதி ஆணையாளர் உட்பட எட்டுப்பேர் கொரனா தொற்றுக்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இதே நேரம் நேற்றைய தினம் புளியந்தீவு பகுதியில் 87அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் 16கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் ராஜ்குமார் தெரிவித்தார்.

அதிகளவில் அரச மற்றும் தனியார் திணைக்களங்களில் கடமையாற்றுவோரே கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

புதியது பழையவை